சின்சினாட்டி ஓபனில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜில் தெய்க்மன்(சுவிட்சர்லாந்து). இப்போது நடைபெறும் யுஸ் ஓபனில் 2வது சுற்றுடன் வெளியேறிவிட்டார். சொந்த ஊர் போகாமல், சோகம் மறக்க ஆழ்கடலில் உற்சாகமாக நீந்தும் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். எந்த ஊர் என்ற கேட்கும் நண்பர்களுக்கு, ஜில் தரும் பதில் சிரிப்பு மட்டும்தான்...