×

மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் ஆர்.காந்தி கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சகத்தின் ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் அபிவிருந்தி ஆணையம் (கைவினைப்பொருட்கள்) சார்பில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற திட்டத்தை ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. ஐந்துரத வீதியில் உள்ள கைவினைஞர்களின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கைவினை சுற்றுலா கிராமத்திற்கான விளம்பர பதாகைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. காரணை கைவினை சுற்றுலா கிராமத்திற்கான முகப்பு பகுதி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. பூம்புகார் நிறுவனத்தின் முயற்சியால் மாமல்லபுரத்தை உலக கற்சிற்ப நகரம் என்று உலக கைத்திற குழுமம் அங்கீகரித்துள்ளது. இது மாமல்லபுரம் கைசிற்ப கலைக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும்.

Tags : Craft Tourism Village ,Mamallapuram , Craft Tourism Village in Mamallapuram: Information in the Policy Note
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...