×

ரேணிகுண்டாவில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய எஸ்ஐ: சிசிடிவி கேமராவில் பதிவு

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பாலாஜி காலனியை சேர்ந்தவர் வரதராஜூலு(74). இவரது மனைவி பாண்டியம்மா(70). இவர் நேற்று முன்தினம் மாலை ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர், 5வது நடைமேடையில் கடைசி பகுதிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கவனித்தார். உடனடியாக அவர் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால், ஏற்கனவே சரக்கு ரயிலுக்கு  சிக்னல் கொடுத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் விரைவாக ஓடிச் சென்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த மூதாட்டியை மீட்டார். மூதாட்டியை காப்பாற்றிய ஒரு சில வினாடிகளிலேயே ரயில் சென்றது.  இதையடுத்து, ரயில்வே போலீசார் பாண்டியம்மாவின் குடும்பத்தினரை வரவழைத்து அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : SI ,Renigunta , SI rescues grandmother who tried to commit suicide by putting her head on the tracks in Renigunta: CCTV camera record
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது