×

உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை வகுப்புவாரியாக இடஒதுக்கீடு அறிவிப்பு: இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் பிரவீன் பி.நாயர், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) க.அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) தனலட்சுமி மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். இதேபோல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதன்படி, திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர், அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், பாஜ சார்பில் கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நயினார், சங்கர், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், ஏழுமலை, காங்கிரஸ் சார்பில்  தாமோதரன், நவாஸ், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் கலைவாணன், ஹக்கீம், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  பாரதிதாசன், அடைக்கலராஜ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்திட கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கூறுகையில், ‘‘ அரசியல்  கட்சி பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, உச்ச  நீதிமன்றத்தில் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும். அதற்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க  வேண்டும்’’ என்றார். இந்நிலையில்  9 மாவட்ட ஊரக  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக  வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து தயார் நிலையில் உள்ள நிலையில் 35 நாட்கள் கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்   செய்துள்ளது.

இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, இந்த மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 9 மாவட்டங்களில்  மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி  உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி தலைவர்  உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு  பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த  பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு: செங்கல்பட்டு  - எஸ்.சி பெண், கள்ளக்குறிச்சி- எஸ்.சி பெண், தென்காசி- பொதுப்பிரிவு  பெண், ராணிப்பேட்டை - பொதுப்பிரிவு பெண், திருநெல்வேலி- பொது, வேலூர்-  பொது, விழுப்புரம்- பொது, காஞ்சிபுரம்- பொது, திருப்பத்தூர்- பொது.

பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு: காஞ்சிபுரம் மாவட்டம்: வாலாஜாபாத்- எஸ்.சி பொது, காஞ்சிபுரம்- பொதுப்பிரிவு பெண், உத்திரமேரூர்- பொதுப்பிரிவு  பெண், குன்றத்தூர்- பொது, பெரும்புதூர்- பொது. செங்கல்பட்டு மாவட்டம்: காட்டாங்கொளத்தூர்-  எஸ்.சி பெண், பரங்கிமலை- எஸ்.சி பெண், திருக்கழுக்குன்றம்- எஸ்.சி பொது,  லத்தூர்- பொதுப்பிரிவு பெண், மதுராந்தகம்- பொதுப்பிரிவு பெண்,  அச்சிறுப்பாக்கம்- பொது, சித்தாமூர்- பொது,

திருப்போரூர்- பொது. விழுப்புரம் மாவட்டம்: முகையூர்-  எஸ்.சி பெண், வல்லம்- எஸ்.சி பெண், கோலியனூர்- எஸ்.சி பொது,  திருவெண்ணெய்நல்லூர்- எஸ்.சி பொது, கனை- பொதுப்பிரிவு பெண், மயிலம்-  பொதுப்பிரிவு பெண், மேல்மலையனூர்- பொதுப்பிரிவு பெண், வானூர்- பொதுப்பிரிவு  பெண், விக்கிரவாண்டி- பொதுப்பிரிவு பெண், செஞ்சி- பொது, கண்டமங்கலம்-  பொது, மரக்காணம்- பொது, ஒலக்கூர்- பொது. கள்ளக்குறிச்சி மாவட்டம்:
சங்கராபுரம்-  எஸ்.சி பெண், தியாகதுருகம்- எஸ்.சி பொது, திருநாவலூர்- எஸ்.சி பொது,  கள்ளக்குறிச்சி- பொதுப்பிரிவு பெண், ரிஷிவந்தியம்- பொதுப்பிரிவு பெண்,  திருக்கோவிலூர்- பொதுப்பிரிவு பெண், சின்னசேலம்- பொது, கல்ராயன்மலை- பொது,  

உளுந்தூர்பேட்டை- பொது. வேலூர் மாவட்டம்: கானியம்பாடி- எஸ்.சி பெண்,  அணைக்கட்டு- எஸ்.சி பொது, வேலூர்- பொதுப்பிரிவு பெண், பேரணாம்பேடு-  பொதுப்பிரிவு பெண், காட்பாடி- பொது, கே.வி.குப்பம்- பொது, குடியாத்தம்-  பொது.

ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு- எஸ்.சி பெண், சோளிங்கர்-  எஸ்.சி பொது, அரக்கோணம்- பொதுபிரிவு பெண், காவேரிப்பாக்கம்- பொதுப்பிரிவு  பெண், வாலாஜா- பொது, நெமிலி- பொது, திமிரி- பொது.திருப்பத்தூர் மாவட்டம்:
திருப்பத்தூர்-  எஸ்.டி. பெண், காந்திலி- எஸ்.சி பெண், ஜோலார்ப்பேட்டை- பொதுப்பிரிவு பெண்,  ஆலங்காயம்- பொதுப்பிரிவு பெண், மாதனூர்- பொது, நாட்றாம்பள்ளி- பொது.

திருநெல்வேலி மாவட்டம்: பாப்பாகுடி-  எஸ்.சி பெண், சேரன்மகாதேவி- எஸ்.சி பொது, களக்காடு- பொது பெண், மானூர்-  பொது பெண், நாங்குநேரி- பொது பெண், ராதாபுரம்- பொது பெண், அம்பாசமுத்திரம்-  பொது, பாளையங்கோட்டை- பொது, வள்ளியூர்- பொது.

தென்காசி மாவட்டம்: மேலநீதநல்லூர்-  எஸ்.சி பெண், கடையம்- எஸ்.சி பொது, கடையநல்லூர்- பொது பெண், கீழப்பாவூர்-  பொது பெண், குருவிக்குளம்- பொது பெண், செங்கோட்டை- பொது பெண், ஆலங்குளம்-  பொது, சங்கரன்கோவில்- பொது, தென்காசி- பொது, வாசுதேவநல்லூர்- பொது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Electoral Commission , Election Commission consults with political parties on local elections Class-wise reservation announcement: Election announcement likely later this month
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...