×

கொரோனாவை தடுக்க பூஸ்டர் டோஸ் தேவையில்லை, 2 டோஸ் போட்டாலே 97.5% எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது : தமிழக அரசு

சென்னை, தமிழகத்தில் கொரோனாவை தடுக்க பூஸ்டர் டோஸ் தேவையில்லை. இரண்டு டோஸ் போட்டுக்கொண்டாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சி.விஜயபாஸ்கர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானி அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழக அரசு பூஸ்டர் டோஸ் (3வது தடுப்பூசி) போடுவது குறித்து முன்னேற்பாடுகள் எதுவும் செய்துள்ளதா?’ என்றார். இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘ஒன்றிய அரசின் வழிகாட்டு ெநறிமுறைகளின் படிதான் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2 தடுப்பூசிகள் மட்டுமே ஒருவருக்கு போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து ஒன்றிய அரசு எதுவும் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்தும் தெரிவிக்கவில்லை. அதுதான் தமிழகத்தில் நிலையும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றிய அரசிடம் நமது முதல்வர் வலியுறுத்திகூடுதலான தடுப்பூசிகளை ெபற்று வருகிறார்.

அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசிடம் இருந்து தடையில்லாமல், தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக ேநற்று ஒரேநாளில் 19,22,080 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று கடந்த ஒருமாதகாலமாக அதிக அளவில் உள்ளது. அங்கே தொற்று குறையாத காரணத்தினால் கேரளா மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முழுமையான அளவு தடுப்பூசி போட உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் அதிகபட்சமாக 6,20,255 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒரேநாளில் 20 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி கேரளா மாநில எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2 தடுப்பூசி போட்டுக்கொண்டாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.

அதேபோன்று 2 தடுப்பூசி போட்டவர்கள் இதுவரை கொரோனாவால் இறக்கவில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும், விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். மூன்றாவது டோஸ் உலகில் எங்கும் போடப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் மூன்றாவது டோஸ் போட வேண்டும் என்று கூறவில்லை. அப்படியே கூறினாலும், அதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்’  என்றார்.


Tags : Government of TN , கொரோனா,பூஸ்டர் டோஸ்,எதிர்ப்பு சக்தி ,தமிழக அரசு
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது: தமிழக அரசு