வ.உ.சி. பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்ப்பு முதல்வருக்கு வைகோ, ஏசிஎஸ் பாராட்டு

சென்னை: வஉசி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்வருக்கு, பாராட்டுகளை தெரிவிப்பதாக தலைவர்கள் கூறினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான அறிவிப்புகளை செய்திருக்கிறார். தூத்துக்குடியில் மேல பெரிய காட்டன் சாலை இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என்று அழைக்கப்படும். வ.உ.சி.யின் முழு உருவச் சிலை, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. வாழ்ந்த நினைவு இல்லமும் திருநெல்வேலியில் உள்ள சிதம்பரனார் மணிமண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும். இவ்வாறு 14 அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். வ.உ.சி.யின் புகழை உலகு அறியச் செய்து இருக்கிறார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று உலகமெங்கும் வாழும் தமிழ்நெஞ்சங்களால் கொண்டாடப்படும் வ.உ.சி.யின் பிறந்தநாளான 5.9.2021 அன்று அவரது 150வது பிறந்தநாள் விழா ‘அரசு விழா’வாக கொண்டாடப்படும் என்று ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் சிறப்புமிகு அறிவிப்பினை வெளியிட்டு, மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். தேச விடுதலைக்காக பாடுபட்ட, தியாக தீபத்திற்கு, இத்தனை சிறப்புகளை அணிகலன்களாக அணிவித்துள்ள தமிழக முதல்வருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நன்றியினையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

>