×

மதுரையில் கடந்த வாரம் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் திருச்சி என்.ஐ டி குழு ஆய்வு

மதுரை: மதுரையில் கடந்த 28ஆம் தேதி மதுரை புது நத்தம் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமான பாலம் விபத்துக்குள்ளானது. குறிப்பாக நத்தம் சாலையில் ஒன்றிய அரசின் பாரத் மாலா என்ற திட்டத்தின் அடிப்படையில் சுமார் 7 கி.மீ தூரத்திற்கு இந்த பாலப்பணி அமைக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை பாண்டியன் ஹோட்டலில் துவங்கி இந்த பாலம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 28ஆம் தேதி நாராயணபுரம் என்ற பகுதியில் இந்த பாலத்தில் இருந்து வரக்கூடிய இணைப்பு பாலத்தில் இரண்டு தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த அந்த பாலம் திடீரென விபத்துக்குள்ளாகியதில் வடநாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக நேரடியாக தமிழக அரசின் நெடுஞ்சாலை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக அமைச்சர்கள் சம்பவ இடங்களை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும். திருச்சியில் உள்ள என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் ஏற்கனவே பாஸ்கரன் இந்த பகுதியில் வந்து ஆய்வினை மேற்கொண்டு சென்றிருந்தார். இந்த குழுவை சேர்ந்த 4 பேர் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாமுவேல், டெல்லியில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் நிபுணர் அலோக், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தற்போது இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாலம் அமைக்கப்பட்ட போது ஹைட்ராலிக் ஜாக்கி பழுதடைந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த நிபுணர் குழுவை பொறுத்த அளவில் இந்த ஹைட்ராலிக் ஜாக்கி தரமான கம்பெனியில் இருந்து பெறப்பட்டதா என்ற கேள்விகளை வைத்து தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த பாலத்தில் வேலை செய்த பணியாளர்கள் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதாவது பொறியாளர்கள் சம்பவ இடத்திலேயே இல்லாமல் தொழிலாளர்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். அதுதொடர்பான விசாரணையும் தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. இந்த பால கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்த பகுதியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணையானது தொடங்கி இருக்கிறது. மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். இது தொடர்பான ஆய்வின் முடித்து 10 நாட்களில் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதுவரை இந்த பாலத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags : Maduro ,Tiruchi N. , Madurai, flyover, accident. Trichy, NIT, Research
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...