×

16 பல்கலைக்கழகங்களில் செனட், சிண்டிகேட்டில் அலுவல் சார்பற்ற உறுப்பினர் பதவிக்கு எம்எல்ஏக்கள் விண்ணப்பிக்கலாம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசியதாவது:  பல்கலைக்கழகங்களின் செனட்,  சிண்டிகேட், அகாடமி கவுன்சில் மற்றும் போர்ட் ஆப் மெனேஜ்மென்ட் ஆகியவற்றில் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களாக பணிபுரிய சட்டமன்ற பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்குமாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

அழகப்பா பல்கலை  ஆட்சி மன்றப்பேரவை (1 உறுப்பினர்), பாரதியார் பல்கலை ஆட்சிமன்றப்பேரவை (2 உறுப்பினர்கள்), பாரதிதாசன்  பல்கலை  ஆட்சி மன்ற பேரவை (2 உறுப்பினர்கள்), மதுரை காமராஜர்  பல்கலை  ஆட்சிமன்றப்பேரவை (4 உறுப்பினர்கள்), மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலை ஆட்சிமன்றப்பேரவை (2 உறுப்பினர்கள்), பெரியார் பல்கலை  ஆட்சிமன்றப்பேரவை (2 உறுப்பினர்கள்), தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை  ஆட்சிமன்றப்பேரவை (2 உறுப்பினர்கள்), தமிழ் பல்கலை  ஆட்சிமன்றப்பேரவை (2 உறுப்பினர்கள்), சென்னை பல்கலை  ஆட்சிமன்றப்பேரவை (6 உறுப்பினர்கள்), அண்ணா பல்கலை  ஆட்சிக்குழு (1 உறுப்பினர்), அண்ணாமலை பல்கலை  ஆட்சிக்குழு (1 உறுப்பினர்), தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை  ஆட்சிக்குழு (1 உறுப்பினர்), தமிழ்நாடு வேளாண்மை பல்கலை  மேலாண்மை குழுமம் (1 உறுப்பினர்),  தமிழ்நாடு மீன்வளப் பல்கலை  மேலாண்மை குழுமம் (1 உறுப்பினர்), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை  மேலாண்மை குழுமம் (1 உறுப்பினர்), திருவள்ளுவர் பல்கலை  கல்விக்குழு (2 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

3 ஆண்டு பதவிக்காலங்களாகும். தேர்ந்தெடுக்கப்பெற விரும்பும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புதாளினை வருகிற 7ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ேபரவை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்புத்தாள் வேண்டுவோர் பேரவை செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  வேட்புத்தாள்கள் வருகிற 8ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விலகிக்கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வருகிற 9ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தங்களது வேட்புத்தாளினை திரும்ப பெறலாம்.  செல்லத்தக்க வேட்புதாளின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கைக்கு மேற்படுமாயின், அப்பல்கலைக்கழகங்களின் அமைப்புகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : Senate ,Speaker , Universities, Senate, Syndicate, Members, MLA, Speaker Dad
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...