×

விடாமல் துரத்தும் வழக்குகள்.. 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளிவர முடியாத மீரா மிதுன்!!

சென்னை :நடிகை மீரா மிதுனுக்கு மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுனை எம்.கே.பி.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்து இருந்தார்.இதற்கிடையே ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த வழக்கில் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜோ மைக்கல் என்பவரை தாக்க திட்டமிட்ட வழக்கிலும், கடந்த 2019ம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய விவகாரத்திலும் மீரா மிதுன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஏற்கெனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஜாமீன் பெற்றிருந்தாலும் மீரா மிதுனால் வெளியே வர முடியவில்லை. மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில், 3 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.


Tags : Mira Mithun , மீரா மிதுன்,ஜாமீன்
× RELATED என்னை கைது செய்வது கனவில்தான்...