×

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் 2வது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் 30 பக்க குற்றப்பத்திரிகையானது எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாகவும் அதன் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

புகாரின் முகாந்திரத்தின் அடிப்படையில் ஆபாசமாக பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன் மீது 2வது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் காரணமாக இன்று 30 பக்க குற்றப்பத்திரிக்கையானது எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் மீது ஏற்கனவே பட்டியலின மக்கள் குறித்து ஆபாசமாக அது சம்மந்தமாக வெளியிடப்பட்ட காட்சியின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெங்களுருவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை அழைத்துவரப்பட்டு அதன் குற்றப்பத்திரிக்கையானது தயாராகி வரக்கூடிய நிலையில் அடுத்த கட்டமாக பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாகவும் அதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 30 பக்க குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் போலீசார் இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்மீது விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Meera Mithun , meera mithun
× RELATED நடிகை மீரா மிதுனை கைது செய்து எப்.4-ம்...