நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே விரிகோடு என்ற இடத்தில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் ஒயர் துண்டிக்கப்பட்டது. இதனால் திருவனந்தபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில், மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் ரயில், குருவாயூர் விரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் ஆங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈஎடுப்பட்டுள்ளனர்.

Related Stories: