×

இந்தியாவில் 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் தளங்கள் ஒவ்வொரு மாதமும் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 95,680 பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூன் 16 முதல் ஜூலை 31ம் தேதி வரை பெறப்பட்ட 594 புகார்கள் அடிப்படையில், இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாகவே 95 சதவீதக் கணக்குகள் முடக்கப்பட்டன,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Watts ,India , 30 lakh WhatsApp accounts frozen in India
× RELATED காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றாலை...