பீகாரில் கனமழைக்கு 43 பேர் பலி.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு!!

பாட்னா : பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்  என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பீகாரின்  14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீட்புப்பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories:

>