×

ஆயுர்வேத சிகிச்சைக்காக ஜாமீன் கோரிய அசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாமியார் அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீங்கள் ஒன்றும் சாதாரண குற்றத்துக்காக சிறையில் இல்லை. அதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான ஆயுர்வேத சிகிச்சை சிறையிலேயே கிடைக்கும். உங்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தது. 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் உத்தரகாண்டில் ஆயுர்வேத சிகிச்சை செய்துகொள்வதற்காக அவர் ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் அசாராம் பாபு சிகிச்சை என்ற போர்வையில் தண்டனையில் இருந்து தப்பிக்க நினைப்பதாகக் கூறினார். அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் அசாராமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று முறையிட்டார். அசாராமுக்கு ஜாமீன் வழங்கினால் தங்களின் குடும்பத்தார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறினார். வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அசாராம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்துள்ளது.

Tags : Supreme Court ,Asaram Babu , Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...