×

எலியார்பத்தி டோல்கேட் கட்டணம் நாளை முதல் உயர்வு-வாகனஓட்டிகள் எதிர்ப்பு

திருமங்கலம் : நாடு முழுவதும் நான்கு வழிச்சாலையில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் வருடத்திற்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது. இதன்படி நாளை செப்டம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் நாளை முதல் புதிய கட்டணம் உயர்வு அமலாகிறது. கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான ஒருமுறை சென்று வரும் கட்டணங்களில் மாற்றமில்லை. ஆனால் கார், ஜீப்புகளுக்கு மாதந்திர டிக்கெட் கட்டணம் ரூ.2,190 முதல் ரூ.2,215 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இலகுரக வணிக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று திரும்பும் பாஸ்டேக் கட்டணம் ரூ.190 இருந்து ரூ.5 அதிகரித்து ரூ.195 ஆக உயா்ந்துள்ளது. இதே வாகனங்களுக்கான மாதாந்திர டிக்கெட் பாஸ் ரூ3,830 இருந்து ரூ.50 அதிகரித்து ரூ.3,880 ஆக உயர்ந்துள்ளது.

 பஸ் மற்றும் லாரிகளுக்கு பாஸ்டேக் முறையில் ஒரு முறை செல்ல இதுவரையில் ரூ.255 இருந்தது. தற்போது அது ரூ.260 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்டேக் முறையில் ஒரு முறை சென்று திரும்ப ரூ.385 ஆக இருந்த சுங்க கட்டணம் தற்போது ரூ.390 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் பஸ், லாரிகளுக்கு மாதாந்திர டிக்கெட் பாஸ் முறை கட்டணம் ரூ.7,660 இருந்து ரூ.100 அதிகரித்து ரூ.7,760 ஆக உயர்ந்துள்ளது.

கனரக லாரிகள், கண்டெய்னர்களுக்கு பாஸ்டேக் முறையில் ஒரு முறை செல்ல ரூ.410ல் இருந்து ரூ.5 அதிகரித்து ரூ.415 ஆகவும், பாஸ்டேக் கட்டணத்தில் ஒருமுறை சென்று திரும்ப ரூ.615ல் இருந்து ரூ.10 அதிகரித்து ரூ.625 ஆகவும் உயர்ந்துள்ளது. கனரக லாரிகள், கண்டெய்னர் உள்ளிட்டவைகளுக்கு மாதாந்திர பாஸ்டேக் கட்டணம் ரூ.12,315ல் இருந்து ரூ.160 அதிகரித்து ரூ.12, 475 ஆக  உயர்ந்துள்ளது. இந்த கடுமையான சுங்க கட்டண உயர்வினால் காய்கறிகள், மளிகை மற்றும் கட்டுமான பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ரும் என்பதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்காசியை சேர்ந்த கண்டெய்னர் டிரைவர் முருகன் கூறுகையில், ‘சென்னை, விசாகபட்டினம், ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை கண்டெய்னரில் ஏற்றி செல்கிறோம். தற்போது டோல்கேட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு முறை சென்று வரும் போது குறைந்தது 5க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரம் சுங்க கட்டண உயர்வினால் மேலும் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு பல்வேறு விலைவாசி உயர்வுக்கு இது வழிவகுக்கும். டோல்கேட் கட்டணத்தை ஏற்றும் ஒன்றிய அரசு நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணிகளை செய்வதில்லை. பல இடங்களில் சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது’ என்றார்.

Tags : Eliarpathi Tolgate , Thirumangalam: Toll gates have been set up at four lanes across the country and tolls are being levied. In which
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்