×

மதுரை ஆதீனம் திட்டவட்டம் நித்யானந்தா இனி வந்தால் அரெஸ்ட்

மதுரை: ‘‘நித்யானந்தா,  மதுரை ஆதீனத்திற்கு வந்தால் அவரை போலீசார் கைது செய்வர். அவரை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என மதுரை ஆதீனத்தின் 293வது  ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அரிகர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆதீனத்தில் வித்வான், ஓதுவார் நியமித்தல், மூன்று வேளையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

மக்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்து வருவதால் தேவார பாடசாலை மூலம் தேசப்பற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நித்யானந்தா, இனி மதுரை ஆதீனத்திற்கு வந்தால், அவரை போலீசார் கைது செய்வர். எனவே, அவரை பெரிதுபடுத்த வேண்டாம். யாரெல்லாம் இந்து சமயத்தை ஏற்று வணங்கி, சமயநல்லிணக்க மாநாடு நடத்தினாலும், அதில் நான் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

Tags : Nityananda , Madurai Aadeenam, Nithyananda, no more, arrested
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்