×

தமிழகத்துக்கு மேலும் 5,48,380 கோவிஷீல்டு வருகை

சென்னை: மத்திய சுகாதாரத்துறை தமிழகத்துக்கு நேற்று, மகாராஷ்டிரா புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்த 5,48,380 டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அவை, 45 பார்சல்களாக புனேவிலிருந்து  இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று  பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. அந்த தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.


Tags : Govshield ,Tamil Nadu , For Tamil Nadu, 5,48,380, Cow Shield
× RELATED சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்...