பாஜ, அதிமுகவினர் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள்: விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் குற்றச்சாட்டு

சென்னை: வேளாண் விரோத சட்டங்களை முதலமைச்சர் முன்மொழிந்தபோது பாஜ, அதிமுகவினர் வெளிநடப்பின் மூலம் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள் என்று வெளியப்படுத்தியுள்ளனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ெவளியிட்ட அறிக்கை: விவசாயிகள் நலன்களுக்கு விரோதமாக ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றயுள்ளது.

மேலும் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதற்கும் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த போது பாஜ, அதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதன் மூலம் தாங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம், பாஜவின் துணை அமைப்பாகத்தான் அதிமுக செயல்பட்டு வருகிறது என்பதை வெளிநடப்பின் மூலம் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளது.

Related Stories: