×

வெள்ளி வென்றார் பவினா

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ்-4 பிரிவில், இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். பரபரப்பான பைனலில் உலகின் நம்பர் 1 வீராங்கனை யிங் ஜோவுடன் நேற்று மோதிய பவினா 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். இப்போட்டி 19 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. யிங் ஜோ தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்ல, 2வது இடம் பிடித்த பவினா வெள்ளிப் பதக்கம் பெற்றார். நடப்பு பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது. மேலும், பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பவினாவுக்கு கிடைத்துள்ளது.

வாழ்த்து மழை: சாதனை வீராங்கனை பவினாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒலிம்பிக் சாதனையாளர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், சேவக் உள்பட அரசியல், விளையாட்டு மற்றும் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Tags : Pavina , Friday, won, Pavina
× RELATED பாரா டிடியில் 2 பதக்கம்