×

கொரோனா பரவல் குறையாத கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்-பழநியில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

பழநி : கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளன.  இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்ல துவங்கி உள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்தும், ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

இதன்படி பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் போலீசார், சுகாதாரத்துறையினருடன் இணைந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்று, இ-பாஸ் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ளனரா என சோதனை செய்து வருகின்றனர். சான்றிதழ்கள் இல்லாதவர்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 


Tags : Kerala ,Donor , Palani: Tourists to Kodaikanal have been given relaxation due to low corona spread. Currently
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்