×

9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை

சென்னை: வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 30ம் தேதி வரை மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

தெற்கு அரபிக் கடல் பகுதியிலும் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளதால், கேரளாவிலும் பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

Tags : Heavy Rain, Meteorological Center
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...