நீதிபதி சுந்தரேசுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ்சும் ஒருவர். அவர், மக்களின் நீதிபதியாவார். ஒப்பீட்டளவில் இளம் வயதில் உச்சநீதிமன்ற நீதியரசராக பொறுப்பேற்கவிருக்கும் எம்.எம்.சுந்தரேஷ், 6 ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் நீடிப்பார். உச்சநீதிமன்றத்தின் 3வது மூத்த நீதியரசர் என்ற நிலைக்கு அவர் உயரக்கூடும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்குவார். அவரது பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>