×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணை: சயான், மனோஜ் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தகவல்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை பொறுத்தவரையில் கடந்த 2017ஆம் ஆண்டு கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில் நடைபெற்றது. இந்த எஸ்டேட் ஆனது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டின் சொகுசு பங்களாவில் இந்த சம்பவமானது நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் அவர்கள் கொள்ளையடிக்கும் போது அங்கு இரவு காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்தனர். இந்த வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ், வாலையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அதுகுறித்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கானது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக சயான் தெரிவித்ததை அடுத்து தற்போது மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

Tags : Sayan ,Manoj ,Azara , Kodanad, murder, robbery
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...