தாம்பரம் சண்முகம் சாலையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது 180வது ஷோரூமை மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி ஷோரூமை திறந்து வைத்தார். இங்கு, பல ரகங்களில் வேட்டி, சட்டைகள், பல வண்ணங்களில் டி-சர்ட்கள், ஆண்களுக்கான பிளைன் மற்றும் டிசைனுடன் கூடிய பனியன்கள், ஜட்டிகள், வேட்டி டிராயர்கள், பிரத்யேக பெல்ட்கள், கைக்குட்டைகள், ஷூ சாக்ஸ், டவல்கள், பெண்களுக்கான உள்ளாடைகள், லெகின்ஸ், சிம்மிஸ், வெள்ளை மற்றும் பல வண்ணங்களில் முகக்கவசம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தற்போது, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஆன்டி பாக்டீரியல் வேட்டி, சட்டைகள் மற்றும் மிருதுவான வகையில் வீட்டில் அணியக்கூடிய வேட்டியுடன் கூடிய டி-சர்ட் ஆகியவை ராம்ராஜ் காட்டன் சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் பரவி வாழும் தமிழருக்காக www.ramrajcotton என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தென்மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: