×

பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கடந்த 25ம் தேதி எனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவரும், தமிழக முதல்வரும், நெருங்கிய நண்பருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Thanks to everyone who wished me a happy birthday: Vijaykanth Report
× RELATED ஓட்டலில் இளம்பெண் கொலை; நடிகை...