உணவு பொருட்களை கையாளுவோர் கையுறையுடன் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் : ஐகோர்ட்

சென்னை: உணவு பொருட்களை கையாளுவோர் கையுறையுடன் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கையுறை அணிவதை கட்டாயமாக அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை செயல்பட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். உணவு பொருள்களை பிரிக்க சுகாதாரத்தை பின்பற்றாததால் நோய் பரவல் அதிகரிக்கும் என வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>