×

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்: போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீரா மிதுனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜோ மைக்கேலை அவதூறாக பேசியதால் மீரா மிதுனை போலீஸ் கைது செய்திருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஜோ மைக்கேல் கொடுத்த புகாரில் மீரா மிதுன் மீது வழக்கு பதியப்பட்டது. எம்.கே.பி. நகர் போலீசார் மீரா மிதுன் மீது நேற்று கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் ஜாமின் வழங்கப்பட்டது. வேறு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீரா மிதுனை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.

துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுப்செய்தனர். தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த மீரா மிதுன் கேரளாவுக்கு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து போலீசுக்கு சவால் விட்ட மீரா மிதுனை கேரளாவில் வைத்து கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனிடம் மேலும் பலகட்ட விசாரணை நடத்த வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டது.

Tags : Chennai ,Vyasarbadi ,M. ,Mira Midthu , M.K.P. , Actress Meera Mithun, Bail
× RELATED போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: யூஜிசி செயலாளர் அறிவுறுத்தல்