×

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18 வயதிற்குட்பட்ட எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் பேச்சு

சென்னை: தமிழ்ச்சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேரவையில் பேசினார். மாபெரும் தமிழ் கனவு நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் எனவும் கூறினார். பொன்னியின் செல்வன் வைக்கம் போராட்டம் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என கூறினார். திருக்குறளுக்கான கலைஞர் உரை தெலுங்கில் மொழியெர்ப்பு செய்யப்படும். தி.ஜானகிராமனின் சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். பிறதிராவிட மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.  2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18 வயதிற்குட்பட்ட எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். கற்றல், கற்பித்தல் இயக்கத்தில் பங்களிக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கருத்தியல் ரீதியாக தலையிட முற்பட்டால் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும். நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் என பேரவையில் பேசினார்.


Tags : Minister ,Anbil Mahesh ,Poyamozhi Assembly , Poetry Award to promote children's writing
× RELATED எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில்...