காளையார்கோவில் பகுதி நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரங்களால் பக்.. பக்.. பயணம்

காளையார்கோவில்: தஞ்சாவூர்- சாயல்குடி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் உள்ளன. இவற்றில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் செல்லும் ரோட்டில் பொருசடி உடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஏராளமானோர் டூவீலரிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.

இந்த பட்டுப்போன மரங்களால் வாகனஓட்டிகள் ஒருவித பயத்துடனே கடந்து சென்று வருகின்றனர். எனவே மரங்கள் முறிந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதனை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: