×

தலைகுந்தா பகுதியில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா பகுதியில் காமராஜ் சாகர் அணை உள்ளது. இந்த அணைக்கு காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தண்ணீர் செல்கிறது. காந்திநகர் பகுதியில் இருந்து செல்லும் தண்ணீர் தலைகுந்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் வழியாக செல்கிறது. விவசாய நிலங்களில் இருந்து செல்லும் இந்த நீரோடையில் மண் அரித்து சென்று, பாலத்தின் அடியில் சேர்ந்துவிட்டது. இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி, மழைக்காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் ஓடும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், அங்குள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் செல்வது வாடிக்கையாக இருந்தது.

இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டும் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை துவங்கியது. தற்போது, பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலத்துடன் சாலைகள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வந்த போதிலும், கட்டுமான பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வேகம் காட்டி வருகின்றனர். ஒரு சில வாரங்களில் இச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, புதிய பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Talakunda , In the headless area Intensity of bridge construction work
× RELATED நீலகிரியில் 8 வயது சிறுமி பாலியல்...