×

தொடர் மழையால் புல்லாவெளி அருவி `புல்லா’ கொட்டுது

பட்டிவீரன்பட்டி: தொடர்மழையால் பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.|பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு பகுதியிலிருந்து 300 அடி தூரத்தில் புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சில்லென்ற சீதோஷ்ணத்துடன் இந்த அருவி பார்ப்பதற்கு பசுமையாகவும், ரம்மியமாக இருக்கும். ஆனால் அருவிக்கு செல்லும் வழி ஆபத்து நிறைந்த பகுதியாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் இங்க குளிப்பதற்கு தடை உள்ளது.

இந்நிலையில் பெரும்பாளை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவி நீர் திண்டுக்கல் நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்றடைகிறது. அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Tags : Pullaveli , Pullaveli waterfall was hit by continuous rain
× RELATED பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்