×

வேல்முருகன் எம்எல்ஏ உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட்: உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்தது

உளுந்தூர்பேட்டை: சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் எம்எல்ஏ உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உளுந்தூர்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வரிகொடா இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் திடீரென சுங்கச்சாவடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார், 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கட்சியின் நிர்வாகிகள் 5 பேர் மட்டுமே ஆஜரானதால் தவாக கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சண்முகம் உத்தரவிட்டார்.


Tags : Velmurugan ,MLA ,Ulundurpet , Ulundurpet court issues bail to 9 including Velmurugan MLA
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...