×

வால்பாறை அருகே மரக்கிளையில் சிக்கிய கரடி: வனப்பகுதியில் விடுவிப்பு

வால்பாறை: வால்பாறை அருகே மரக்கிளையில் சிக்கிய கரடி, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மரத்தில் இருந்த தேன் கூட்டை சுவைக்க சென்ற 2 கரடியில், ஒரு குட்டி கரடி மரக்கிளை ஒன்றில் சிக்கியது. மரத்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்தது. சம்பவம் அறிந்த வனத்துறையினர் மரத்தை வெட்டி, மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்டனர். பின்னர் ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள வனத்துறை முகாமில் கூண்டில் அடைத்து நேற்று இரவு சிகிச்சை அளித்தனர்.

கரடியின் காலில் ஏற்பட்ட வீக்கம் குறைந்ததால் கரடியை மீண்டும் அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்கநர் கணேசன் உத்தரவின்படி, உதவி வன பாதுகாவலர் செல்வம் தலைமையில், வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன், கால்நடை மருத்துவர்கள் சுகுமாறன், மெய்யரசன், வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் 2ம் கட்ட சிகிச்சைக்கு பின் கரடி குட்டியை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் ஆண்டிப்பாறை வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூண்டில் இருந்து விடுவித்தனர்.

Tags : Valparai , Bear trapped in a tree branch near Valparai: Release in the wild
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை