×

சென்னை வண்ணாரப்பேட்டையில் மண்ணுக்குள் சிக்கிய ஒருவர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதல் தெருவில் மழைநீர் சேகரிப்புக்கு தோண்டிய குழியில் 3 பேர் விழுந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி நடந்து வந்தது.

 தண்டையார்பேட்டை பகுதியில் தனியார் கண் மருத்துவமனைக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்புக்காக குழி தோண்டும் பொழுது மண் சரிந்து 3 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். உடனடியாக 2 பேரை சக பணியாளர்கள் மீட்டுள்ளனர். ஆனால் ஒரு நபரை மீட்க முடியாமல் தற்போது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டிய போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் மீட்கப்பட்டுள்ளார். மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது 3 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கினர். ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சின்னதுரை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின் தொழிலாளர் சின்னதுரை ஆம்புலன்ஸில் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார். 15 அடி ஆழத்தில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.


Tags : Washermenpet, Chennai , Chennai, Washermenpet, Rainwater harvesting
× RELATED சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்...