×

காபூல் விமான நிலையத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது, ஐஎஸ் தீவிரவாதிகளின்ஆபத்து அதிகரித்துள்ளதாக அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கனைவிட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு தாலிபான்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அரசு உறுதியளித்தபடி 31ம் தேதிக்குள் படைகளை திரும்பப் பெறாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் படை வீரர்கள் மற்றும் பொது மக்களை வெளியேற்றுவது குறித்து ஜி7 நாடுகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமெரிக்க அதிபர் ஜோபிடன், ஏற்கனவே உறுதியளித்தபடி 31ம் தேதிக்குள் படைகளை வெளியேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு தாலிபான்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.காபூல் விமான நிலையத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது என்பதை தாம் உணர்ந்து இருப்பதாகவும் அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுக்களின் தாக்குதல் ஆபத்து அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31க்குள் வெளியேறும் பணிகள் முடியாவிட்டால் ஒரு சில தற்காலிக திட்டங்களையும் பெண்டகனிடம் கேட்டுள்ளதாக ஜோபிடன் தெரிவித்தார். தாலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்தே ஜி7 நாடுகள் அவர்களை அங்கீகரிக்கும் என்று ஜோபிடன் கூறியுள்ளார்.இதனிடையே அமெரிக்க உளவு அமைப்பான சிஏஐயின் இயக்குனர் வில்லியம் ரகசியமாக ஆப்கன் சென்று தாலிபான் இயக்கத் தலைவர் அப்துல் கனி பர்தரை சந்தித்து பேசியதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.   


Tags : Kabul airport ,President Jobidan ,IS , அமெரிக்கா
× RELATED ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ பள்ளி...