×

பஞ்ஷிர் மாகாணத்தை ஒப்படைக்க முடியாது: தாலிபான் படைகளுக்கு சவால் விடும் அகமது மசூத்

பஞ்ஷிர்: ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33ஐ கைப்பற்றியுள்ள தாலிபான்கள் எஞ்சியுள்ள பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க மற்றும் நட்டோ படைகள் கடந்த மே 1ஆம் தேதியில் இருந்து வெளியேறிய தொடங்கிய நாளில் இருந்தே தாலிபான்கள் மாகாண தலைநகரங்களை கைப்பற்றி வந்தனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றி ஆப்கானை பிடித்தனர்.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் 34 மாகாணங்கள் இருக்கின்றன. இதில் 33ஐ தாலிபான்கள் எளிதாக பிடித்து விட்டனர். ஆனால் பள்ளத்தாக்கு மாகாணமான பஞ்ஷிரை அவர்களால் இன்று வரை கைப்பற்ற முடியவில்லை. ஆப்கானில் தேசிய கதாநாயகன் என அழைக்கப்படும் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பஞ்ஷிர் மாகாணத்திற்குள் தாலிபான்களின் படைகளால் நுழைய முடியவில்லை. பஞ்ஷிர் மாகாணத்தை தாலிபான்களிடம் ஒப்படைக்கும் வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள மசூத் இறுதி மூச்சு உள்ளவரை தாலிபான்களை எதிர்த்து போரிட போவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் பஞ்ஷிர் மாகாணத்தை நோக்கி தாலிபான்களின் படைகள் சென்று கொண்டிருக்கும் காணொலியை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றினால் ஆப்கான் முழுவதும் தங்கள் வசமாகிவிடும் என்பதால் ஓரிரு நாட்களில் அகமது மசூத்தின் படைகளுடன் முழு பலத்துடன் மோத தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Banjir ,Ahmed Masood ,Taliban , Taliban
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...