×

பிரதமர் மோடியை சந்தித்து நிதிஷ்குமார் வலியுறுத்தல்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுடெல்லி: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினரை தவிர இதர பிரிவு மக்களை சாதிவாரியாக கணக்கிடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி உட்பட 10 அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமரிடம் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. இது தொடர்பான கோரிக்கை மனுவையும் தந்தனர்.  பின்னர், நிதிஷ்குமார் அளித்த பேட்டியில்,‘‘இது ஏழை மக்களுக்கு உதவும் வரலாற்று நடவடிக்கை. விலங்குகளையும், மரங்களையும் கணக்கெடுக்க முடியுமானால் மக்களை கணக்கெடுக்க முடியாதா. நிச்சயம் முடியும்” என்றார்.


Tags : Nitish Kumar ,Modi ,Sativari , Prime Minister Modi, Nitish Kumar, Sativari Census
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...