சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு..: ஓபிஎஸ்-இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓபிஎஸ்-இபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் 2017 ஏப்.23-ல் ஒரு கும்பல் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் இந்த பிரச்சனை சூடுவிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது சட்டப்பேரவையில் விவாதிக்கும் அளவுக்கு எந்த பிரச்சனை மாற்றியுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஐகோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதாவது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓபிஎஸ்-இபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இளவரசி, சுதாகரன், முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளிரம்பாவை விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இபிஎஸ் தொடர்பு பற்றி சயான் பேசிய நிலையில் அதன் தீவிரத்தை பரிசீலிக்க கீழமை நீதிமன்றம் தவறிவிட்டது என மனுதாரர் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரிவியும். புலன் விசாரணைகளை வெளிப்படையாக விசாரிக்காமல் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>