×

ரூ.5 லட்சம் கேட்டு நள்ளிரவில் தகராறு: ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை: பிரபல ரவுடிகள் 2 பேர் கைது

* தேன்கனிக்கோட்டை அருகே பயங்கரம்தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பெல்லூரை சேர்ந்தவர் சந்திரப்பா.  இவரது மகன் லோகேஷ் (எ) புல்லட் லோகேஷ் (36). பெயின்டிங் கான்ட்ராக்டர் மற்றும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.  இதேபோல், தளி அருகே குருபரப்பள்ளியை சேர்ந்தவர் எதுபூஷன் ரெட்டி (32). இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.  கிருஷ்ணகிரி மாவட்ட ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் உள்ளது. லோகேசும், எதுபூஷன்ரெட்டியும் நண்பர்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் வீட்டிற்கு ரவுடி எதுபூஷன் ரெட்டியும், ஓசூரை சேர்ந்த பிரபல  ரவுடியான கஜா (எ)கஜேந்திரன் (34) மற்றும் 2 பேரும் காரில் வந்தனர். அவர்கள் லோகேஷை வெளியே அழைத்துச் சென்றனர். அங்கு  லோகேஷிடம் பேசிய எதுபூஷன்ரெட்டி, தான் புதிதாக வீடு கட்டி வருவதால், ரூ.5 லட்சம் உடனடியாக தருமாறு கேட்டுள்ளார். அவர்  கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதுபூஷன்ரெட்டி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் லோகேஷின் நெற்றியில்  சுட்டார். இதில் மூளை சிதறி அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு  லோகேஷின் மனைவி ஜெயந்தி (30) மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் லோகேஷை மீட்டு ஓசூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லோகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது  குறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தப்பித்து செல்ல முடியாதபடி மாவட்டம்  முழுவதும் உஷார்படுத்தினர்.இதற்கிடையே, பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக காரில் வந்த  எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் சொகுசு கார் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.  அவர்களுடன் வந்த மேலும் 2பேர் குறித்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து, அவர்களிடம் லோகேஷை கொலை செய்ததற்கான காரணம்  குறித்து விசாரித்தனர். ரவுடி எதுபூசன்ரெட்டி மீது ஏற்கனவே, தனது அண்ணனை கொன்ற வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தளி  காவல் நிலையத்தில் உள்ளது. ரவுடி கஜா கடந்த 2015ல் ஓசூரில் கொலை முயற்சியில் தப்பியவர். அவருடன் இருந்த நண்பர் மகேஷ்  வெட்டி கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு கடந்த 2016 செப்டம்பரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரியை  ஓசூர் ரயில் நிலையம் எதிரில், நேரு நகரில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிக் கொலை செய்தனர். அதன் பிறகு கடந்த  2020 பிப்ரவரியில் ஓசூர் திமுக பிரமுகர் மன்சூரை பண விவகாரத்தில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அரசு ஆண்கள் பள்ளி  விளையாட்டு மைதானத்தில் வெட்டிக் கொலை செய்தனர். 2 கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கஜா,  ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்….

The post ரூ.5 லட்சம் கேட்டு நள்ளிரவில் தகராறு: ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை: பிரபல ரவுடிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhayankaramtenkanikotta ,Thenkanikotta ,Chandrappa ,Bellur ,Thenkanikotta Thaluka Thali, Krishnagiri District ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற...