×

இந்தூரில் இஸ்லாமிய வியாபாரி மீது சரமாரி தாக்குதல் : காங்கிரஸ் கடும் கண்டனம்!!

இந்தூர் : மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இஸ்லாமிய வியாபாரி ஒருவர் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தூரில் உள்ள கோவந்த் நகரில் 25 வயதான தஸ்லீம் என்ற இளைஞர் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வளையல் விற்றுள்ளார்.அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் இந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே இந்தூர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் சிறுபான்மை நலத்துறை இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, குற்றவாளிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.   


Tags : Volley ,Islamist ,Hindur , இஸ்லாமிய வியாபாரி
× RELATED நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில்...