×

அடுத்த ஆண்டுக்குள் 75 எக்ஸ்பிரஸ் அறிமுகம் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு வசதி: விபத்தின்போது தப்பிக்க 4 அவசர ஜன்னல்

புதுடெல்லி: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே சார்பில் தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்படுகின்றன. டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா பாதைகளில் இவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் பெட்டிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு, சிசிடிவி  கேமராக்கள், தானியங்கி கதவுகள் மற்றும் பயோ-டாய்லெட் போன்ற  வசதிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.  நாட்டின் அனைத்து பகுதிகளையும் இது இணைக்கும்,’ என்று அறிவித்தார்.

அதன்படி, இந்திய ரயில்வேயின் அதிவேக புதிய ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ பல்வேறு கூடுதல் அமசங்களுடன் விரைவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

* புதிய 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அமைக்கப்பட உள்ள புதிய பெட்டிகள் ஒவ்வொன்றிலும், விபத்து காலங்களில் வெளியேறுவதற்காக 4 அவசர கால ஜன்னல்கள் அமைக்கப்பட உள்ளன.
* மேலும், மின்சாரம் முழுவதும் தடை பட்டாலும் மீட்பு பணிக்கு உதவும் வகையில் 4 அவசர விளக்குகள், 4 அவசர பொத்தன்கள், புஷ் பேக் சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
* ரயிலின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் கண்காணிக்க மைய கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது.
* விபத்து காலங்களில் பெட்டிகள் நொறுங்கினாலும், தீ விபத்து ஏற்பட்டாலும் பாதிக்காத கேபிள்கள் பொருத்தப்பட உள்ளன.

Tags : 75 Express ,Bharat , Next year, express, Bharat train, safety facility
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்