சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல் 3 வீரர்கள் பலி

நாராயண்பூர்:  சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் இந்தோ - திபேத் படையை சேர்ந்த உதவி கமாண்டர் உட்பட 2 வீரர்கள் பலியானார்கள். இது குறித்து பாஸ்டர் வனப்பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘நாராயண்பூர் மாவட்டத்தில் சோன்டெட் டாங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தோ- திபெத் எல்லை காவல் படையினரின் 45வது முகாம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நக்சல்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி கமாண்டர் உள்ளிட்ட மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>