×

கடன் வழங்கல், சேமிப்பு டெபாசிட் பாங்க் ஆப் மகாராஷ்டிரா முதலிடம் பெற்று சாதனை

சென்னை: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கடன் வழங்குதல் மற்றும் சேமிப்பு டெபாசிட்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. புனேயை தலைமையிடமாக கொண்ட பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, வெளியிட்ட நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த கடன் வழங்கல்  ரூ.1,10,592 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.46 சதவீதம் உயர்வு. இதன்மூலம், பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்கலில் முதல் இடத்தை இந்த வங்கி பிடித்துள்ளது.  இதற்கு அடுத்ததாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ரூ.67,933 கோடி (10.13% வளர்ச்சி) வழங்கி 2ம் இடத்தை பிடித்தது.

 இதுபோல், பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் டெபாசிட்கள் 14% அதிகரித்துள்ள. காசா எனப்படும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகை விகிதம் பிற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாக 22% உயர்ந்து, ரூ.92,491 கோடியாக உள்ளது. மொத்த வர்த்தகம் 14.17% அதிகரித்து ரூ.2.85 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் இரட்டிப்பாகி ரூ.208 கோடியாகியுள்ளது. வராக்கடன், முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 10.93 சதவீதமாக இருந்த நிலையில்,  6.35 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Maharashtra , Credit, Savings Deposit, Bank of Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...