×

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களில் மலையாளிகள்: வீடியோ ஆதாரத்துடன் சசிதரூர் எம்பி டுவிட்

திருவனந்தபுரம்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் இயக்கத்தில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சசிதரூர் எம்பி வீடியோ ஆதாரத்துடன் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில்  தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அசாதாரண சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் ரமீஸ் என்பவரின் டிவிட்டரில் இருந்து ஒரு வீடியோ பகிரப்பட்டது. அது காபூலை கைப்பற்றிய தலிபான் இயக்கத்தினர் வெற்றி களிப்புடன் பேசும் வீடியோ. அதில், ஒருவர்  ‘‘சம்சாரிக்கட்டே’’ என்று மலையாளத்தில் பேசும் சத்தம் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை சுசிதரூர் எம்பியும் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர், ‘‘காபூலை கைப்பற்றியுள்ள தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மலையாளத்தில் பேசுவது தெரிய வந்துள்ளது. ஒருவர் மலையாளத்தில் பேசும்போது இன்னொருவர் அதை ஆமோதிக்கிறார். எனவே அந்த இடத்தில் குறைந்தது 2 மலையாளிகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். தலிபான் இயக்கத்தில் மலையாளிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Taliban ,Afghanistan ,Sachitharur , Malayalees among the Taliban who captured Afghanistan: Sachitharur MP Dwight with video source
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...