×

உத்தரகாண்ட்டில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் ராணுவ அதிகாரி

டேராடூன்: உத்தரக்காண்ட் உட்பட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளர், கூட்டணிகள் குறித்து இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், டேராடூனில் உள்ள ஐஆர்டிடி அரங்கத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக மாஜி ராணுவ அதிகாரி அஜய் கொதியால் களமிறக்கப்படுவார்’’ என்று அறிவித்தார். பின்னர், கெஜ்ரிவால், அஜய் கொதியாலுடன் நகரின் மைய பகுதியில் வாகன பேரணி நடத்தினார்.


Tags : Aum ,Athmi Principal Candidate Military Officer ,Uttar Kandt , Aam Aadmi Party chief candidate in Uttarakhand is an army officer
× RELATED உத்தரகாண்ட்டில் உருவான செயற்கை...