×

ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்களுடன் நட்புறவுக்கு தயார் : பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் ஆதரவு!!

பெய்ஜிங் : பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்களுடன் நட்புறவுக்கு தயார் என்று அறிவித்துள்ளது. தங்கள் விதியை தீர்மானிக்கும் முடிவை துணிந்து எடுத்துள்ள ஆப்கன் மக்களின் உரிமையை சீனா மதிப்பதாகவும் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செய்லபட சீனா தயாராக இருப்பதாகவும் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Hua Chunying  தெரிவித்துள்ளார். முன்னதாக தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து இருந்தது.

சீனா, பாகிஸ்தானைத் தொடர்ந்து ரஷியாவும் தாலிபான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.ஆனால் உடனடியாக ஆதரவு தெரிவிக்காமல், அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதன்படி ஆதரவு தெரிவிக்க போவதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான ரஷிய சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுளோ இது குறித்து கூறுகையில், முதலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தாலிபான்களின் அரசை ரஷியா உன்னிப்பாக கவனிக்கும். அதன் பிறகே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.இதில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அண்டனியோ குட்டரஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மீதான தாலிபான்களின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 190 உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Taliban ,Afkhan ,Pakistan ,China , சீனா
× RELATED என்கவுன்டரில் 23 தீவிரவாதிகள் பலி: 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு