×

மேகாலயா முதல்வர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு.. பயங்கர வன்முறையால் 2 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிப்பு, இணையதள சேவை துண்டிப்பு

இம்பால் : மேகாலயாவில் முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. மேகாலயாவில் முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ் என்பவர் போலீஸ் சோதனையின் போது, அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.  தாங்கீவ் கொலைக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் சுதந்திர
தினத்தன்று மாநிலம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியுடன் ஆங்காங்கே பிரமாண்ட பேரணிகளையும் நடத்தினர்.

 தாங்கீவ் கொலை தொடர்பாக வெளிப்படையான நீதி விசாரணைக்கு முன்மொழிந்து அம்மாநில உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.இந்த நிலையில் அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா இல்லத்தில் பெட்ரோல் வீசப்பட்டுள்ளது.அவர் வேறு இல்லத்தில் இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.கலவரத்தை கட்டுப்படுத்தமாநிலம் முழுவதும் 2 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.4 மாவட்டங்களில் இணையதள வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Meghalaya Chief Minister , மேகாலயா
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...