×

கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

வள்ளியூர்: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டதையடுது்து மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியால் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மத்திய மின் தொகுப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டு அதன் மூலம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் புதுவைக்கும் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 11ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கையால் அணுஉலையில் கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று முதல் இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. முதலாவது அணுஉலை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kudankulam , Kudankulam 2nd nuclear reactor resumes power generation
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...