புளியந்தோப்பில் குட்கா விற்றவர் கைது

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ஆடு தொட்டி பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த ஆசாமியை மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவர் வைத்திருந்த பையை  சோதனை செய்தபோது 200 குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து பைக்குடன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடுங்கையூர் பெரியார் சாலை சத்யா நகர் பகுதியை சேர்ந்த கோவில்ராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்  கோவில்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: