×

வேலூர் கோட்டையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை

வேலூர் : வேலூர் கோட்டையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை தயார்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ெதால்லியல்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் கோட்டையில் தினமும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ேகாட்டையில் உள்ள ஜலகண்ேடஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்களை காண்பதற்கும், அருங்காட்சியகங்களை பார்வையிடுவதற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதேபோல், தாய்மார்களும் அதிகளவில் குழந்தைகளுடன் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதில் கை குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்ட வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றலாப்பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், ெதால்லியல் துறை மூலம் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ள கட்டிடம் புனரமைக்கப்பட்டு, கழிவறை, பேன் வசதியுடன் பாலூட்டும் அறையாக தயார்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தொல்லியல்துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சுரேஷ் தெரிவித்தார்.

Tags : Vellore Fort , Vellore: A breastfeeding room has been set up at Vellore Fort. It is expected to come into use next week
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை